;
Athirady Tamil News

பொலிஸாரைக் கண்டதும் கிணற்றில் வீசப்பட்ட வாள்; இளைஞனையே கிணற்றினுள் இறக்கி மீட்ட பொலிஸார்!

0
யாழ்ப்பாணத்தில் பொலிசாரை கண்டதும் உடைமையில் இருந்த வாளினை இளைஞன் கிணற்றினுள் வீசியுள்ளான். குறித்த இளைஞனை கிணற்றினுள் இறக்கி வாளினை பொலிஸார் மீட்டுள்ளனர் 
அனலைதீவு பகுதியில் , வீடொன்றில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு பொலிஸ் குழுவினர் சென்றுள்ளனர்
பொலிசாரை கண்டதும் , இளைஞன் வீட்டில் இருந்த வாள் ஒன்றினை தனது வீட்டு கிணற்றினுள் வீசியுள்ளார். அதனை அவதானித்த பொலிஸார் வாளினை வீசிய இளைஞனை பிடித்து , அவரையே கிணற்றினுள் இறக்கி அந்த வாளினை மீட்டுள்ளனர்
அத்துடன் வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டில் இருந்தும் வாள் ஒன்றினையும் இரண்டு முகமூடிகளையும்  பொலிஸார் மீட்டுள்ளனர்
அதனை தொடர்ந்து கைது செய்த இளைஞனையும் ,  மீட்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் இரண்டு முகமூடிகளையும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.