இன்று முதல் பேருந்து பயணத்தில் வங்கி அட்டை பாவிக்கலாம்!
இலங்கையில் இன்று (24) முதல் பயணிகள் பஸ்களில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (24)…
பாசிக்குடாவில் நீராட சென்றவர் மாயம்
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது தொடர்பில், கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை பிரதேசத்தைச்…
யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவில் நடந்த களேபரம்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…
இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: காஸாவில் 24 பேர் பலி, 54 பேர் படுகாயம்
வடக்கு மற்றும் மத்திய காஸாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி ட்ரோன் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். குழந்தைகள் உள்பட 54 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அக்டோபர் 10 ஆம்…
இந்த தற்குறிகள் ஒன்று சேர்ந்து வாழ்நாள் முழுக்க… – எச்சரித்த விஜய்
உங்கள் கொள்கையே கொள்ளை அடிப்பது தானே என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
விஜய் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு
தவெக தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்தித்து பேசி…
யாழில். குழந்தையின் நகை திருட்டு – சந்தேகத்தில் சித்தப்பா கைது
தனது சகோதரனின் குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க நகையை களவாடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணுவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க நகை திருட்டு போயுள்ளதாக சுன்னாகம்…
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணி ஆரம்பம்; நடைப் பயிற்சிக்கு பூங்கா அமைக்கவும் திட்டம்…
வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை. இங்கிருந்தவர்கள் வாக்குகளை பெற்று தங்கள் வேலைகளை செய்தார்கள் என என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே குற்றஞ்சாட்டினார்.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிய…
யாழ் வீரர்களுக்குப் போதிய வசதியில்லை: தீர்வுகாண உள்ளக விளையாட்டரங்கம் அமைகிறது –…
கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்…
உக்ரைன் – ரஷியா போா்: ஜெனீவாவில் சமாதானப் பேச்சு
உக்ரைன் மீதான ரஷியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முன்மொழிந்த சமாதானத் திட்டம் குறித்து, உக்ரைன் மற்றும் அதன் நட்பு மேற்கத்திய நாடுகளுக்கு இடையே ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஞாயிற்றுக்கிழமை உயா்நிலைப் பேச்சுவாா்த்தைகள்…
ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்
பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் காந்தி சர்வதேச விமான…
அவதானமாக இருங்கள்..! வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 25.11. 2025 வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது…
சரிகமப இறுதிச்சுற்று ; இலங்கை தமிழ் இளைஞனுக்கு இரண்டாம் இடம்
இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று (23) இடம்பெற்றது.…
நைஜீரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பினர்
நைஜீரியாவின் வட-மத்திய நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 303 பள்ளி மாணவர்களில் 50 பேர் தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் இருப்பதாக பள்ளி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
10 முதல் 18…
மாவனெல்ல–ரம்புக்கனை வழிப்பாதை பாதிப்பு ; சாரதிகள் மாற்று வழிகள் பயன்படுத்துமாறு அறிவிப்பு
மாவனெல்ல - ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது பெரிய மரம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்குறித்த விபத்து காரணமாக மாவனெல்ல - ரம்புக்கனை வீதி தடைபட்டுள்ளது.
எனவே, அனைத்து சாரதிகளும் அந்த…
திருகோணமலை சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் சஜித்
திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு தேவையில்லாத போதிலும் பொறுப்பு…
தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?
தாய்லாந்தில் கடந்த சில நாள்களாக தொடரும் கனமழையால் 3 நாள்களில் மட்டும் 59 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், சோங்க்லா மாகாணத்திற்குட்பட்ட ஹாட் யாய் மாவட்டம் முழுவதுமே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்திக் கடந்த வாரம் முழுக்க…
பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை கைது செய்த பொலிஸார்: பறிப்போன பெண் உயிரிழப்பு
பிரித்தானியாவின் ஸ்விண்டனில் நடந்த கொலைச் சம்பவத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 வயது சிறுமி கைது
ஸ்விண்டனில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுமி…
போர் அச்சுறுத்தல் விடுக்கும் ஜப்பான்… ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முறையிட்ட சீனா
தைவான் தொடர்பில் ஜப்பான் உடனான மோதலை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது சீனா.
தற்காத்துக் கொள்ளும்
தைவான் விவகாரத்தில் ஜப்பான் போர் அபாயத்தை ஏற்படுத்துவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இரண்டு வாரங்களாக நீடிக்கும்…
ஓய்வுபெற்ற அரச அதிகாரிக்கு இரவில் காத்திருந்த அதிர்ச்சி ; பறிபோன பல இலட்சங்கள்
ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் மொரந்துடுவ, மெலேகம பகுதியில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு..
மனநல மறுவாழ்வு நிறுவனத்தில் வசித்து…
இத்தாலியில் டெல் அவிவ் விளையாட எதிர்ப்பு: வெடித்த வன்முறை..ரொக்கெட்டுகளை வீசிய…
இத்தாலியில் இஸ்ரேலிய கூடைப்பந்து அணி விளையாட கிளம்பிய எதிர்ப்பு வன்முறையாக மாறியது.
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு
காஸாவில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடுமையான இஸ்ரேல் கண்டனங்களை சந்தித்து வருகிறது.
விமர்சகர்கள் பலரும்…
யாழ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ; காலநிலை மாற்றத்தால் வேகமெடுக்கும் ஆபத்து
யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர் எச்சரித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் டெங்கு…
தகர்ந்த காசா போர் நிறுத்தம்: இஸ்ரேலிய வான் வழித் தாக்குதலில் 9 பேர் பலி
காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையில் நீடித்த 5 வார போர் நிறுத்தம் தற்போது தகர்ந்துள்ளது.
காசாவை குறிவைத்து இஸ்ரேல்…
கடுகன்னாவ மண்சரிவு ; உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
ஏற்பட்டுள்ள அவசர அனர்த்த நிலைமை காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதால் நாளை (24) குறித்த வீதி ஊடாக உயர்தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அது தொடர்பான கடமைகளில் ஈடுபடும்…
உலகின் முதல் செயற்கை தீவு ; சீனாவின் அதிநவீன ரகசிய திட்டம்
சீனா உலகை அதிர்வடைக்கும் வகையில், அணு ஆயுத வெடிப்பான தாக்குதல்களை கூட எதிர்கொள்ளக் கூடிய தொழில் நுட்பமாக மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு செயற்கை தீவுப் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தீவு நகர்த்தக்கூடிய வகைப்படுத்தப்பட்டு, பாதி அளவு நீரில்…
நோபல் பரிசு வென்ற மரியாவுக்கு வெனிசுலா அரசு மிரட்டல்
நோபல் பரிசு வென்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு வெனிசுலா அரசு மிரட்டல் விடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனநாயக உரிமைக்காக போராடுவதால்…
யாழ் நீச்சல் தடாகம் புனரமைப்பு: குழப்பம் காரணமாக அமைச்சர் வெளியேற்றம்!
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர்…
ஒரே ஒரு மரணத்தால் அதிர்ந்து போன அமெரிக்கா ; விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கனவே பிற…
மண்சரிவால் சிதைந்து போன தமிழ் வர்த்தகரின் குடும்பம் ; ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை
பஹல கடுகன்னாவ கனேதென்ன பகுதியில் 22ஆம் திகதி காலை ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான சிசிடிவி காணொளி வௌியாகியுள்ளதுடன் தமிழ் வர்த்தகரின் வர்த்தக நிலையம் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகரின் குடும்பத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்…
விபத்தில் சிக்கி தான் யார் என்பதையே மறந்த நபர்: மீண்டும் விபத்தில் சிக்கியபோது…
இந்தியாவின் ஹிமாச்சலைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுவன் விபத்தொன்றில் சிக்கி தான் யார் என்பதையே மறந்துபோனான்.
இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் அந்த நபர் ஒரு விபத்தில் சிக்கி தலையில் அடிபட, 45 ஆண்டுகளுக்குப் பின் தான் யார் என்பது அவருக்கு…
யாழில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ; நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு
அராலி மத்தி, வட்டுக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக ஒரு சிறிய பணி செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு அற்ற நிலையில் இருந்த நன்னீர் கிணறு ஒன்றினை புனரமைத்து, நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர்த் தாங்கி அமைத்து குடிநீர் வழங்கல் சேவை…
9 வளைவு பாலத்தை ஒளிர வைப்பதில் சிக்கல்
தனியார் நிலம் வழியாக மின்சார கேபிள்களை நிறுவுவது தொடர்பான சிக்கல்கள் காரணமாக, பதுளை – தெமோதரை பகுதியிலுள்ள 9 வளைவு பாலத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யும் திட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியம்…
தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர் – அடுத்து நடந்தது என்ன?
காயத்தில் தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்கை மருத்துவர் தடவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெவிக்விக் மருத்துவம்
உத்தரப்பிரதேசம், மீரட்டில் உள்ள ஜக்ருதி விஹார் காலனியில் சர்தார் ஜஸ்பிந்தர் சிங்கின் குடும்பம் வசிக்கிறது.…
யாழில் இரவோடிரவாக கைது செய்யப்பட்ட பெண் ; அதிர்ச்சி கொடுத்த நீண்ட கால பின்னணி
யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 10 லீற்றர் கசிப்புடன் 42 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றிரவு(22) சுன்னாகம் பொலிஸாரால் கைது…
யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா
வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகிறது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான வளங்களைப் பெற்று, எமது…