இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியில் இருப்பது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
களுத்துறை பொது மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணரான வைத்தியர் ஹசந்தி ஜெயலத் இதனை தெரிவித்துள்ளார்.
வெப்பமான…
நீராடிக்கொண்டிருந்த சிறுவன் துஷ்பிரயோகம்; இரு மாணவர்கள் கைது
குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவனுடைய மலக்குடலில், பாசி மற்றும் தாமரைத் தண்டினைப் பலவந்தமாக நுழைத்த இரண்டு மாணவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம், நவகத்தேகம, பலகதவெவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய ஒரு மாணவனும்,…
கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ ; நாடாளுமன்றில் விஜய் குறித்து விவாதம் !
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள நிலையில், இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (6) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்…
ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா
ஹோா்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்களை நடத்திய நிலையிலும், அந்நாட்டுடனான போா்நிறுத்தம் தற்போதும் அமலில் இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
கடந்த ஏப். 8 முதல் சுமாா் ஒரு மாதமாக போா்நிறுத்தம் அமலில்…
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின்: கண்கலங்கி அழுத தொண்டர்கள்
சென்னை கொளத்தூரில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின, இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக…
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய தகவல்
இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்… வெளிவந்துள்ள நடுங்க வைக்கும் பின்னணி
சீனாவில் கடந்த 2022ல் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானமானது, விபத்தில் சிக்கியதன் அதிரவைக்கும் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
எரிபொருள் விநியோகம்
மொத்தமாக 132 பேர்கள் கொல்லப்பட்ட அந்த விமான விபத்தானது, நடுவானில்…
ஈரான் பூமியிலிருந்து துடைத்தெறியப்படும்: டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்,
அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
அமெரிக்காவின் சுதந்திர திட்டம்…
யாழ் புங்குடுதீவு வித்யா வழக்கு ; மரண தண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!
யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், 'சுவிஸ் குமார்' உள்ளிட்ட நான்கு…
புங்குடுதீவில் கோர விபத்து: இளைஞன் உயிரிழப்பு
வேகமாகப் பயணித்த பஸ் புங்குடுதீவிலிருந்து சென்ற மோட்டார்ச் சைக்கிள் மீது யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாம் அருகில் இன்று புதன்கிழமை (06.05.2026) மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞன்…
ஈரான் மோதல் தாக்கம் தொடரும் ; உலக பொருளாதாரத்திற்கு IMF எச்சரிக்கை
ஈரான் மீதான மோதல் தற்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தாக்கங்கள் உலகளவில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா…
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது – மம்தா பானர்ஜி சொல்லும் காரணம் என்ன?
மேற்கு வங்கத்தில் தோற்ற பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆட்சியை கைப்பற்றிய பாஜக
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக…
கச்சத்தீவை கேட்காதீர்!! திருவிழாவுக்கு மட்டும் வந்து செல்லுங்கள்.. விஜய்க்கு நாமல் அழைப்பு
கச்சத்தீவை கேட்க வேண்டாம், அது எமது சொத்து. வேண்டுமென்றால், கச்சத்தீவு திருவிழாவிற்கு முறையான வீசா அனுமதிப் பெற்று ஒரு சுற்றுலாப் பயணியாக வந்து செல்லலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு…
ஆயிரக்கணக்கான அரச தொழில் வெற்றிடங்கள் – கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000 க்கும் மேற்பட்ட அதிபர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தகுதியான விண்ணப்பதாரர்களை தாமதமின்றி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி…
இரவில் வசமாக பிடிபட்ட போலி வைத்தியர் ; அரங்கேறிய மோசடி
பொலன்னறுவை, தீப உயன பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 59 வயதான போலி மருத்துவர் ஒருவர், பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல், பன்னலவைச் சேர்ந்த 59 வயதுடைய…
கொழும்பில் அதிசொகுசு மாளிகையால் சிக்கிய மகிந்த குடும்பம் – பல ரகசியங்கள் அம்பலம்
கொழும்பு, டொரிங்டன் மாவத்தையில் அமைந்துள்ள, 40 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொகுசு மாளிகை தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது பாரிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இந்தத் காணி வெறும் சொத்து மட்டுமல்ல, கடந்த காலங்களில் யோசித…
7 ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா; ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்
உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில்…
நாளை முதலமைச்சராகும் விஜய் ; திமுகவிலிருந்து தாவும் காங்கிரஸ்
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள்…
கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு பலியான குடும்பஸ்தர்
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று (05) காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக…
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ; பாஸ்போர்ட் முதல் டாலர் வரை டிரம்பின் பெயர்
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கக் குடிமக்களின் புதிய பாஸ்போர்ட்களில் அதிபர் டிரம்பின் முகம் இடம்பெறவுள்ளது.
பாஸ்போர்ட்டின் உட்பக்கத்தில் சுதந்திரப் பிரகடன உரையின் நடுவே டிரம்பின் புகைப்படம் மற்றும் தங்க…
அதிக பணிச்சுமை ; கடிதம் எழுதி பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்
அதிக பணிச்சுமை காரணமாகத் தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, பயாகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2026 மே மாதம் 05…
வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவோருக்கு வெளியான அறிவித்தல்
வெளிநாட்டவர் ஒருவருக்கு வீடு அல்லது ஏதேனும் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கினால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் கோரிக்கை…
விஜயின் வெற்றி – யாழில். வதை தாங்காது உயிரை மாய்த்த குடும்பஸ்தர்
விஜயின் தேர்தல் வெற்றி , மது விருந்தில் பகிடிவதைக்கு உள்ளான குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே உயிர் மாய்த்துள்ளார்.
தமிழக சட்ட மன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம்…
புதுச்சேரியில் மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார் ரங்கசாமி.. விரைவில் பதவி ஏற்பு
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆளும் அரசுக்கு வருகிற ஜூன் 15-ந்தேதி வரை ஆயுள் காலம் உள்ளது. இந்தநிலையில் புதுச்சேரிக்கான…
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 26 பேர் பலி
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 26 போ் உயிரிழந்தனா்; 61 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.…
தவெக எம்எல்ஏக்களை சென்னையிலே தங்க வைக்க திட்டம் – விஜய் முக்கிய ஆலோசனை
பதவியேற்பு விழா முடியும் வரை தவெக எம்எல்ஏக்களை சென்னையிலே தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தலிலே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்…
மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் வருமா? தீர்வு தேடும் ஆலோசனை
2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டண மீளாய்வு தொடர்பில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (மே 6) பங்குதாரர்களுக்கான பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டமொன்றை…
பெண்கள் ஆணைக்குழு செயல்பாடுகளை வலுப்படுத்த புதிய திட்டம்
பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பில் ஆணைக்குழுவின் செயற்திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.…
தமிழர் பகுதியில் உயர்தரம் படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கதி ; பொதுமக்கள் அச்சம்
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் சுமார் மாலை 3.30 மணியளவில், முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு வகுப்பிற்கு சென்று வீடு…
புதிய சைபர் மோசடி அலை ; போலி வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் பண மோசடி
அண்மைக்காலமாக வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய வகை வீடியோ அழைப்பு மோசடிகள் குறித்துப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Geographic Reference இந்த மோசடி…
ஒரே குடும்பத்தில் 3 பேர் எம்.எல்.ஏ.வாக தேர்வு
புதுச்சேரி,
புதுவை மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் தொழிலதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது கட்சியான எல்.ஜே.கே. சார்பில்…
தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா?
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…
பிலிப்பின்ஸ்: மாயோன் எரிமலைச் சாம்பல் வெளியேற்றத்தால் பாதிப்பு
பிலிப்பின்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மாயோன் எரிமலையில் இருந்து கடந்த வாரஇறுதியில் பெருமளவில் எரிமலைச் சாம்பல் வெளியேறியது.
எரிமலையின் தென்மேற்கு சரிவில் தேங்கியிருந்த எரிமலைக் குழம்புப் படிமங்கள் திடீரென சரிந்து விழுந்ததால், அடா் சாம்பல்…