;
Athirady Tamil News

தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்- கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த்…

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்கள் இந்த கோடைகாலத்தை சமாளிப்பதற்கு தே.மு.தி.க. சார்பில்…

யாழில், வாடகைக்கு பெற்ற காரினை 65 இலட்சத்திற்கு ஈடுவைத்த மூவர் கைது!!

வாடகை காரை 65 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நபர்…

பருத்தித்துறையில் கடற்தொழிலாளர்கள் போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு…

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா முடிவு!!

அரேபியா நாடுகள், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகளாலேயே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒபெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்த…

பா.ஜனதா சார்பில் சமூகநீதி வார கொண்டாட்டம்- அண்ணாமலை அறிவிப்பு!!

பா.ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாளான ஏப்ரல் 6-ந்தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படும். இந்த ஆண்டு 6-ந்தேதி முதல் ஒருவாரம் சமூகநீதி வாரமாக கொண்டாடப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இதுதொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க தனி…

தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!!

தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 - 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய…

யாழ். பல்கலையில் போதிய வரவின்மையால் பரீட்சைக்கு அனுமதியில்லை : ஆராய கூடுகிறது விஞ்ஞான…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் சிலரை, வரவு ஒழுங்கின்மை காரணமாக பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மழை !!

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் குறைப்பு !!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்…

19 பேரும் பிரதமரையும் தேடிச்சென்றனர் !!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பெற்றோலிய தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளனர். இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேவும் கலந்துகொண்டார். கலந்துரையாடலின்…

சென்னை-கோவை ரெயில் உள்பட 4 வந்தே பாரத் ரெயில்கள் இந்த மாதத்தில் இயக்கப்படுகிறது!!

நாட்டின் அதிவேக ரெயில் சேவைக்காக வந்தே பாரத் ரெயில் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரெயில்களின் சேவை வழித்தட எண்ணிக்கையை ரெயில்வே அமைச்சகம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் – கூகுள்…

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன்…

வில்லிவாக்கத்தில் மதுகுடிக்க பணம் கொடுக்காததால் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை!!

வில்லிவாக்கம், மூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு மணிகண்டனுக்கு திருமணம் நடை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது இருக்கும் வீட்டில் வசதி குறைவாக இருந்ததால் வில்லிவாக்கம்…

இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்: வெள்ளை மாளிகை உயரதிகாரி!!

இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என்று அமெரிக்க அதிபருக்கான துணை உதவியாளரும், இந்தோ - பசிபிக் ஒருங்கிணைப்பாளருமான கர்ட் கேம்பெல் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய - அமெரிக்க உறவு…

ஐ.பி.எல். போட்டி- சென்னையில் 7 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி போட்டி நடைபெறும் 7 நாட்கள் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நாளை (3-ந்தேதி), வருகிற 12-ந்தேதி, 21-ந்தேதி, மே 10-ந்தேதி, மே 14-ந்தேதி ஆகிய நாட்களில்…

வடகொரியாவில் கர்ப்பிணிகளும், குழந்தைகளும் தூக்கிலிடப்படுவதாக தென்கொரியா குற்றச்சாட்டு!!

வடகொரியா மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் தூக்கிலிடுகிறது என்று தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில், “ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட கொரியா…

விவசாயிகள் மனம் வைத்தால் 242 கோடி மரங்கள் நடுவது பெரிய விஷயமே இல்லை- காவேரி கூக்குரல்…

"தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலங்களின் வரப்போரங்களில் 50 முதல் 100 மரங்களை வைத்தாலே 1000 கோடி மரங்களை வைத்துவிடலாம். அப்படி பார்க்கும் போது, விவசாயிகள் மனம் வைத்தால் 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே…

பாகிஸ்தான் பணவீக்கம் 35.37% ஆக அதிகரிப்பு!!

பாகிஸ்தானில் மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் 35.37% ஆக அதிகரித்துள்ளது. இது முன் எப்போதும் இல்லாத உயர்வு என்று பாகிஸ்தான் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உற்பத்தி குறைந்து இறக்குமதியும் குறைந்து வருவதால்…

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 14 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்ஐசி பெயர்ப்பலகையில்…

குருத்தோலை ஞாயிறு: போப் பிரான்சிஸ் பங்கேற்பு!!

வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய போப் பிரான்சிஸ் பங்கேற்றார். போப் பிரான்சிஸ் கடந்த சில தினங்களுக்கு முன் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டார்.…

6 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- இந்தியாவில் ஒரே நாளில் 3,824 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 3,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 30-ந்தேதி பாதிப்பு 3,016 ஆக இருந்தது. மறுநாள் 3,094 ஆக உயர்ந்தது. நேற்று 2,995 ஆக குறைந்த நிலையில்…

பின்லாந்து பாராளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!!

பின்லாந்தில் இன்று பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 22 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2400 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் பிரதமர் சன்னா மரின்…

பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம் !!

உயர்நீதிமன்ற விதிகளின் பிரகாரம், பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல், 2023.03.30 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் வெள்ளை, கறுப்பு, வெளிறிய வெண்மை, சாம்பல் அல்லது ஊதா…

ஏலம் போகும் எம்.பிக்கள் எம்மிடம் இல்லை !!

எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு செல்வதற்குப் பதிலாக அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு வருவதற்கே பலர் காத்திருப்பதாகவும் ஏலத்துக்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றை நாடுவோம் !!

அரசாங்கம் கொண்டு வரவுள்ள, பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுமாயின் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தமானியில்…

அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி மீண்டும்…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசு பஸ்கள், சொந்த மற்றும் தனியார் வாகனங்களில் திருமலைக்கு வருகின்றனர். இதுதவிர அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் வந்து திவ்ய தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.…

சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தல்!!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமைக்கான காயங்கள் காணப்படுவதாகவும் , அவர்களுக்கு விட்டமின் சி மற்றும் டி மாத்திரைகள் கட்டாயப்படுத்தி…

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 4 இந்தியர்கள் உள்ளிட்ட 8 பேர் பலியான சோகம்!!

கனடா-அமெரிக்கா எல்லையில் 4 இந்தியர்கள் உள்ளிட்ட 8 பேர் இறந்து கிடந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்வேசாஸ்னே அருகே உள்ள ஆற்றங்கரையில் உள்ள சதுப்பு நில பகுதியில் இருந்து 8 பேரின் சடலங்களும் கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும்…

திருப்பதி கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடக்கிறது. 3 நாட்களும் தினமும் காலை 7 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து,…

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பிரமுகர் சுட்டுக்கொலை!!

மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் ராஜூஜா. பா.ஜனதா பிரமுகர். தொழில் அதிபராகவும் இருந்தார். இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் துர்காபூரில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். பர்தமான் மாவட்டம் சக்திகர் பகுதியில்…

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனை வெற்றி- இஸ்ரோ சாதனை!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது. இந்த நிலையில் தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும்…

பீகார் கலவரத்தில் ஒருவர் பலி- வன்முறை குறித்து கவர்னரிடம் கேட்டறிந்த அமித்ஷா!!

நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. பீகாரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது. ரோத்தாஸ் மாவட்டம் சசரம் பகுதியில்…

மாணவர்கள் காதலிக்க விடுமுறை வழங்கிய கல்லூரிகள் !!

காதலிப்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீனாவில் ஏற்பட்டுள்ளது. சடுதியாக பிறப்பு விகிதம் சரிவடைந்த நிலையிலேயே கல்லூரிகள் இந்த முடிவை எடுத்துள்ளன. முதற்கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் 9 பிரபல…