;
Athirady Tamil News
Daily Archives

13 June 2025

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் வான்வழிக் கண்காணிப்பை…

விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இதுவரை 265 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும், விமானம்…

ஏர் இந்தியா விமான விபத்து… கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி…

விபத்தில் சிக்கிய ஏர் இந்திய விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பிரித்தானியப் பயணி ஜேமி ரே மீக் என்பவர் அகமதாபாத்திலிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த காணொளி தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. விடைபெறுகிறேன்…

‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின்…

'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் இன்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது தேசிய…

மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார். மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது…

இஸ்ரேல் மற்றும் ஈரானுடன் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையிலான பதற்ற நிலையை தணிப்பதற்கு இரு நாடுகளும் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு…

இது மிகவும் நல்ல விஷயம்! எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார். டிரம்ப்- எலான் மஸ்க் மோதலில் ஏற்பட்ட சமரசம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுடனான ஒன்று கூடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கிழக்கு மாகாண அங்கத்தவர்களின் நலன் கருதி மாவட்ட ரீதியான ஒன்று கூடல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுடனான விசேட ஒன்று கூடல்…

இலங்கையில் பெயர் மாற்றப்பட்ட உப்பு

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை…

டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிா்ப்பு: அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:…

உலகை உலுக்கிய கோர விமான விபத்து குறித்து துல்லியமாக கணித்த ஜோதிடர்

ஒரு வாரத்திற்கு முன் ஜோதிடர் ஷர்மிஸ்தா தனது எக்ஸ் தளத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமான விபத்து நடக்கும் என கணித்துள்ளார். இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த ஜூன் 05 ஆம் திகதி 2025-ல்…

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி – அகமதாபாத் பெருந்துயரம்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், இந்த விமானம் விபத்துக்குள்ளான பிரத்யேக சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி…

தவறுதலாக கொன்றுவிட்டோம் ; பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்

களுத்துறை - பனாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சார சபை ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (12)…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. இதனால் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளின் வான் வழித்தடங்களில் பல்வேறு மாற்றங்கள்…

காருடன் தீ வைத்துக்கொண்ட கணவன் ; வீட்டைவிட்டு சென்ற மனைவியால் விபரீதம்

கொழும்பு - பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில் கார் ஒன்றுக்கு தீ வைத்த நபரொருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை…

தேனிலவு கொலை: திருமணத்துக்கு முன்பே திட்டம்; மனைவி வாக்குமூலம்!

தேனிலவில் வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை முன்பே திட்டமிட்டதை அவரது மனைவி சோனம் ஒப்புக்கொண்டதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலைக்கான மூளையாக சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா செயல்பட்டதாகவும், சோனம் உடனிருந்து…

சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம்

சாவகச்சேரி நகரசபை தவிசாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார். சாவகச்சேரி நகர சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில்…

காரைக்காலில் கழிவுகள் கொட்டும் செயற்பாட்டை நிறுத்த பணிப்பு – தவிசாளரானதும் முதல்…

காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் புதிதாக கழிவுகளைக் கொட்டுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை…

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய நல்லூர் தவிசாளர்

நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று , அஞ்சலி செலுத்தி , ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் சபா…

தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைக் காப்பாற்றக் கோரி கவனயீர்ப்புப்…

" எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் " என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்…

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் முன்பு தாயகத்தில் குடும்பத்துடன் சில…

கறுப்பு பெட்டி மீட்பு – அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன?

அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், அது ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில…

55 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸா பகுதியில் கடந்த…

நல்லூர் பிரதேச சபை தவிசாளராக பத்மநாதன் மயூரன் ஏகமனதாக தெரிவு!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்த்த பத்மநாதன் மயூரன் ஏக மனதாக தெரிவாகியுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்றைய தினம்…

இரு பொலிஸாரின் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா…

விடுதலைப் புலிகளால் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 35 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வின் பின்னர் இரு பொலிஸாரின் வீட்டுக்கு சென்று கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர நலன்…

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்கள் முன்னெடுப்பு!

யாழ். வடமராட்சி இந்து கல்லூரியின் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பவனி நிகழ்வும், வீதி நாடகமும் இன்றயதினம் காலை 8:30 மணியளவில் ''பிளாஸ்டிக் மாசுப்பாட்டை முடிவுறுத்துவோம் " எனும் தலைப்பில் பாடசாலை முன்றலில் ஆரம்பமானது. இந்த…

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 57-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 57-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக வியாழக்கிழமை வந்த மத்திய அமைச்சா் வெலென்கோசினி லாபிசா இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.…

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்களுக்கு எதிராக…

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று(12.06.2025) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர கடந்த கூட்டத்தில்…

யாழ் முதல்வராக மதிவதனி

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில்…

கூட்டுறவுத்துறை பின்னடைவைச் சந்தித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கூட்டுறவு அபிவிருத்திக்காக உற்பத்தி கூட்டுறவை வளப்படுத்தும் - உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,…

லண்டனிலிருந்து ஆறு வருடங்களுக்கு பிறகு இந்தியா வந்த குடும்பந்தினருக்கு நேர்ந்த துயரம்

இந்தியாவின் அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு வருட கனவுகளுடன் லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க புறப்பட்ட பிரதிக் ஜோஷி குடும்பத்தினர் எயார்…

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற்று முன்தினம் (ஜூன் 11)…

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார். இவர் தனது 91ஆவது வயதில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.