;
Athirady Tamil News

தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

0

தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
#############################

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..
“ஈழதர்சன் லெவீனா”

குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க

நீங்கள் ஒருவர் மீது
ஒருவர் வைத்திருக்கும்
அன்பும் காதலும் என்று
தொடர்ந்து வளரட்டும்..!

இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..!
இன்று போல என்றும்
இல்லறம் சிறப்பாக
இருக்க இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!

21.10.2023 சனிக்கிழமை அன்று திருமண பந்தத்தில் இணையும் ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் இமை போல் வாழ்ந்து இமயம் போல் வளர்ந்து என்றும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகின்றோம்.

சுவிஸில் பிறந்து, வளர்ந்து இன்றைய நாளில் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளான “ஈழதர்சன் லெவீனா” ஆகியோரின் திருமண நன்னாளை முன்னிட்டு அவர்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட மதியஉணவு இன்றையதினம் வழங்கப்பட்டது.

தாயக பிரதேசங்களான சாவகச்சேரி, கிளிநொச்சி பிரதேங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளின் திருமண நிகழ்வு சுவிஸ் நாட்டில் இன்று 21.10.2023 இடம்பெறுகிறது. இதனை முன்னிட்டு முதல் நிகழ்வாக திரு.திருமதி ஈழதர்சன் லெவீனா திருமண வைபவம் சிறப்பாக அமைய வேண்டி விசேட பூசையினையும் கலந்து கொண்ட மக்களுக்கு திருமண விருந்துபசாரமும் தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

அவ்வாறே புதுத் தம்பதிகள் தமது திருமணத்தை தாயக உறவுகளோடு கொண்டாட வேண்டி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க சிறப்பாக விசேட மதியஉணவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இன்றைய நாளில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாக சபை உறுப்பினரும், முக்கியஸ்தருமான திருமதி நவரத்தினம் பவளராணி அவர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில், மாணவ மாணவிகள், சிறுவர், சிறுமிகள் அவர்களின் பெற்றோர்கள், அங்கு வாழும் குடும்பங்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி லெனின் எனும் செல்வபாலன், சசி எனும் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரன் செல்வன்.ஈழதர்சன், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர்களும், சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி.கந்தசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப்புதல்வி செல்வி. லெவீனா ஆகிய இருவருக்கும் பெற்றோரின் முன்னிலையில் நேற்று 20.10.2023 அன்று திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்வை தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் விசேடமாக ஆலய பூசை மற்றும் விசேட மதிய விருந்துபசாரம் வழங்கி சிறப்பாக கொண்டாடியது. திரு.திருமதி ஈழதர்சன் லெவீனா தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் அவர்கள் விரும்பிய தாயக உறவுகளுக்கான திருமண விசேட விருந்துபசாரம் இன்று மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் சிறப்பான வகையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வன் செல்வன்.ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் திருமண நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல்வேறு உதவி நிகழ்வுகள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செல்வன்.ஈழதர்சன் அவர்களின் தந்தை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் என்பதுடன் புளொட் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான தோழர்.லெனின் எனும் திரு.செல்வபாலன் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தந்தையைப் போன்றே சமூகத் தொண்டில் என்றும் முன்னின்று தனயனும் செயலாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுத் தம்பதிகளான திரு.திருமதி ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்கவென தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்துகிறது.

அத்தோடு தமது திருமண நாளினை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு விசேட உணவினை வழங்குவதற்கு நிதிப்பங்களிப்பு செய்தமைக்காகவும் தம்பதிகளுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

21.10.2023

தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.