;
Athirady Tamil News

குறிப்பு வழங்கியவருக்கு விளக்கமறியல் !!

0

கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவித்த சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீராகல, நேற்று (17) உத்தரவிட்டார்.

சந்தேகநபர் தொடர்பில் மனநல மருத்துவ அறிக்கையை கோருமாறும் கறுவாத்தோட்ட
பொலிஸாருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் குண்டுத் தாக்குதல்
நடத்தவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த
காவலர்களுக்கு கடந்த 15ஆம் திகதி கடதாசியில் குறிப்பை வழங்கிய நபர் தொடர்பில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி கறுவாத்தோட்டப்
பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை பொலிஸ் மா அதிபரினால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்வதற்காக நேற்றுமுன்தினம் (16) ஆர்ப்பாட்டத்தின் இடம்பெற்ற போது
கறுவாத்தோட்டம் பகுதியில் இருந்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக நீதிமன்றில்
அறிவித்தனர்.

சந்தேகநபர் ஆதாரமற்ற வாக்குமூலங்களை வழங்குவதால் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

அதனைடுத்தே, சந்தேகநபர் குறித்த மனநல அறிக்கையை கோருமாறும், அவரை எதிர்வரும்
24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.