;
Athirady Tamil News

கடந்த வாரத்தில் திருப்பதியில் ரூ.20 கோடி உண்டியல் வசூல்…!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது.

இதனால் பக்தர்கள் மூலம் உண்டியல் வருவாய், பக்தர்கள் தங்கும் அறை வாடகை உள்ளிட்ட இதர வருவாய் குறைந்தது. தொற்று பரவல் குறைந்ததால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டது.

தற்போது ரூ.300 டிக்கெட்டில் 10,000 பக்தர்களும், இலவச தரிசனத்தில் 10,000 பக்தர்களும் என 20 ஆயிரம் பக்தர்களுக்கு, ஸ்ரீவாணி ட்ரஸ்ட் மற்றும் விஐபி பிரேக் தரிசனம் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானிடம் தங்களது குறைகளை முன் வைத்து பிரார்த்தனை செய்கின்றனர்.

பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் நகை, பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கடந்த 10-ந்தேதி 28,868 பேர் தரிசனம் செய்தனர். 15,235 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.43 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். 11-ந் தேதி 34,040 பக்தர்களும், 12-ந்தேதி 33,802 பக்தர்களும், 13-ந்தேதி 33, 775 பக்தர்களும், 14-ந்தேதி 32,173 பக்தர்களும், 15-ந்தேதி 33,898 பேரும், நேற்று 33,776 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 14-ந்தேதி அதிகபட்சமாக ரூ.4.17 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது. கடந்த வாரத்தில் 20 லட்சத்து 30 ஆயிரத்து 332 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ20.02 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.