;
Athirady Tamil News

17 மாநிலங்களில் பரவிவிட்டது- ஒமைக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்வு…!!

0

இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக பரவியபடி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 300 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.

இன்று காலை ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358-ஆக உயர்ந்தது. மகாராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. அதன் பரவும் வேகத்தை தடுக்க புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒமைக்ரான் மிக வேகமாக பரவினாலும் அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் பாதித்தவர்களிடம் அறிகுறிகள் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 358 பேரில் 114 பேர் நன்கு குணமடைந்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன. மத்தியபிரதேசத்தில இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பொது இடங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில் 50 சதவீதம் பேருக்கு மேல் கூடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரியானாவில் ஜனவரி 1-ந் தேதி முதல் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.