;
Athirady Tamil News

சுதந்திர தின கொண்டாட்டம் இரத்து -தான்சானிய அதிபர் அதிரடி !!

0

தான்சானிய அதிபர் அந்நாட்டின் 61 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகவும் அவசரமான முன்னுரிமை அடிப்படையில் இரத்து செய்துள்ளார்.

அத்துடன் இந்த சுதந்திரதின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை பாடசாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கியுள்ளார்.

அதிபர் ஜோன் மகுஃபுலியின் மரணத்திற்குப் பிறகு பதவிக்கு வந்த அதிபர் சாமியா சுலுஹு ஹசன், ஜனநாயக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான நம்பிக்கையைத் தூண்டியதாக உள்ளூர் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

“அவர் சர்வதேச சமூகத்தை கவரும் வகையில் நாட்டின் மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதார மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்,” என்று மூத்த பொருளாதார நிபுணர் மற்றும் ஆலோசகர் இட்ரிசா வாங்வே கூறினார்.

தான்சானியாவின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்தை விட சிறந்த நிலையில் உள்ளது.

இதேவேளை அதிபர் ரணில் விக்ரமசிங்க தான்சானிய அதிபரின் முடிவை பின்பற்ற வேண்டுமென கொழும்பில் சில அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.