;
Athirady Tamil News

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று !!

0

நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கமைய, காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதேநேரம், இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகளில் மூவாயிரத்து 284 இராணுவத்தினர், 179 யுத்த வாகனங்கள், 867 கடற்படையினர் மற்றும் அவர்களது 52 வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

வான் படையின் 695 உத்தியோகத்தர்களும், 336 பொலிஸார் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

அத்துடன், பொலிஸ் விசேட அதிரடி படையை சேர்ந்த 220 பேரும் இன்றைய சுதந்திர நிகழ்வில் இணையவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.