;
Athirady Tamil News

நடேஷ்வர கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு கேமா அறக்கட்டளையினால் பரிசளிப்பு!! (PHOTOS)

0

காங்கேசன்துறை நடேஷ்வர கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்காக கேமா அறக்கட்டளை மற்றும் tamilnews1 இணையத்தளம் ஆகியவை இணைந்து பரிசளிப்பு நிகழ்வினை இன்றைய தினம் நடாத்தியது.

அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு கேமா அறக்கட்டளை மற்றும் tamilnews1 இணையத்தளம் ஆகியவை இணைந்து, காங்கேசன்துறை நடேஷ்வர கனிஷ்ட வித்தியாலய தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்காக வாசிப்பு போட்டியினையும் மற்றும் ஆண்டு 1 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக சித்திரப்போட்டியினையும் கடந்த சில தினங்களாக வகுப்பறையில் நடாத்தி வந்தது.

இந்த போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுள் தேர்ச்சி அடிப்படையில் ஆறு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

அவர்களில் இருவர் இன்றைய தினம் பாடசாலை அதிபரின் வழிகாட்டலில் சமூக சேவகியும் முன்னாள் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமாகிய கௌசலா சிவா அவர்களினால் தெரிவுசெய்யப்பட்டதுடன் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்ச்சித்திட்டமானது பாடசாலைக்கு மாணவர்களை தவறாது சமூகமளிக்க வைப்பதோடு அவர்களுக்குள் கல்வி மீதான ஆர்வத்தை தூண்டும் நோக்கோடு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மீள்குடியேற்ற பகுதியான காங்கேசன்துறை பிரதேசத்தில் உள்ள இப்பாடசாலையானது குறைந்தளவு மாணவர்களை கொண்டுள்ளதோடு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களே அதிகளவில கல்விகற்கின்றனர்.

எனவே மாணவர்களுக்கான வாசிப்பு திறன் விருத்தியை ஊக்குவிக்கும் வகையில் இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஆண்டு 5 மாணவர்களுக்கும் போட்டிகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவியும் கேமா அறக்கட்டளையின் ஸ்தாபகருமான திருமதி எஸ் கேமலதா அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கியதோடு , சமூகவேவகி கௌசலா சிவா , பாடசாலை அதிபர் , ஆசிரியர்களும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.