;
Athirady Tamil News

இராமர் பாலத்தையும் அதன் சுற்றுசூழலையும் அழிக்கும் ரணில் மோடி பாலம்!!

0

Ranil Modi bridge destroying Adams bridge and the surrounding environment இராமர் பாலத்தையும் அதன் சுற்றுசூழலையும் அழிக்கும் ரணில் மோடி பாலம்

இராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்கும் இடையிலான 48 கிலோமீட்டர் சுண்ணாம்புக் கற்களினால் ஆன இயற்கையான இராமர் பாலம் பல்லாயிரக்கணக்கான அரிதான நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. இந்த பாலப் பகுதியில் பல மணல் திட்டுக்கள் காணப்படுவதுடன் அதில் பல அரிய வகை பறவைகள் இனம் பெருகுவதாகவும் அறியப்பட்டுள்ளது. இதைவிட இந்தப் பகுதியில் காணப்படும் கடல் தாவரங்களின் மத்தியில் அரிய மீன்கள் மட்டுமல்லாது கடலாமைகள் மற்றும் முலையூட்டிகளான கடல் பசுக்கள் (dugongs), ஓங்கில்கள் (dolphins ) போன்ற அரிய உயிரினங்களும் காணப்படுகின்றன. இதன் காரணமாக 2015ம் ஆண்டு இராமர் பாலத்தை அண்டிய பகுதிகள் பாதுகாக்கப்படவேண்டிய கடல்சார் தேசிய பூங்காவாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தினால் அறிவிக்கப்பட்டது.

The 48 km Adam’s Bridge consisting of natural limestone reefs between Rameswaram and Mannar is home to thousands of rare aquatic species. Many sand dunes are found in this bridge area and many rare species of birds are known to breed there. Apart from this, among the marine plants found in this area, not only rare fish but also rare creatures such as turtles and mammals such as dugongs and dolphins are also found. Due to this, in 2015, the area surrounding the Adams Bridge was declared by the United Nations Environment Program as a marine national park to be protected.

இதையெல்லாம் கணக்கில் எடுக்காது இந்த இராமர் பாலத்தில் பாரிய துளைகளை இட்டு கான்கிரீட் தூண்களை அமைத்து தமது அரசியல் வியாபாரத்துக்காக அரிய உயிரினங்களை அழிப்பதற்கு இரண்டு அரசியல்வாதிகளும் தயாராகி வருகின்றனர். இவர்களுடைய அடிவருடிகளாக செயல்படும் புத்திஜீவிகள் சிலர் ஆழம் குறைந்த இராமர் பாலத்தின் மேல் கான்கிரீட் தூண்களை அமைத்து பாரிய பாலம் அமைப்பது இலகுவானது என்று கூறுகிறார்களே தவிர இதனால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி வாய் திறக்காமல் இருக்கின்றனர்.

Not counting all this, two politicians are preparing to destroy the rare species for their political business by drilling massive holes in this Adam’s Bridge and erecting concrete pillars. Some of the intellectuals who act as their followers say that it is easier to build a huge bridge by placing concrete pillars on the shallow Adam’s bridge area, but they remain silent about the environmental impacts.

ரணில் மோடி பாலத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் பாதிப்புகள் குறித்து குரல் எழுப்புவதற்கு அரசியல் ஆதாயம் தேடாத சூழலியலாளர்கள் ஓன்று திரளவேண்டும்

Environmentalists who are not looking for political gain should come together to raise their voice about the potential environmental impacts of the Ranil Modi Bridge.

நன்றி Thank you

Dr முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர் 13.8.2023

Dr Murali Vallipuranathan
Consultant Community Physician13.8.2023

மன்னாரில் அரச அதிகாரிகளினால் கைவிடப்பட்ட கண்டல் காடு!! (PHOTOS, VIDEOS)

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)

காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.