அமெரிக்க முன்னாள் அதிபருக்கு உணவு பரிமாறிய வாக்னர் படைத் தலைவர்!!
விமான விபத்தில் உயிரிழந்த வாக்னர் படைத்தலைவர் பிரிகோஜின் 17 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு உணவளித்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்.
ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிடம் விமான விபத்தில் பிரிகோஜின் இறந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறதா என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதிலில்:
அதிர்ச்சியான விஷயம்
“இல்லை, எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த G8 உச்சிமாநாட்டின் படத்தை நான் பார்த்தேன்., அங்கு அவர் எனக்கு உணவு பரிமாறும் பையன்.” “அவர் புடினின் சமையல்காரர், அவர் படத்தில் இருந்தார்,” என புஷ் கூறினார்.
பிரிகோஜினை நேரில் சந்தித்தாரா என்பது நினைவில் இல்லை என்று தெரிவித்த அவர் “எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் உயிர் பிழைத்தேன் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க முன்னாள் அதிபருக்கு உணவு பரிமாறிய வாக்னர் படைத் தலைவர் (படங்கள்) | Chief Wagner Serves Food To Former Us President