;
Athirady Tamil News

எரிசக்தி மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது ரஷியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!!

0

ஐ.நா. சபையின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பு கவுன்சிலில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

ரஷியா எரிசக்தி மற்றும் உணவை ஆயுதமாக்கி வருகிறது. மில்லியன் கணக்கான மக்கள் உணவு தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர். பசி மற்றும் பட்டினியால் வாடுகின்றனர். மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதில் கனடா அர்ப்பணிப்புடன் உள்ளது. உக்ரைன்- நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் உலகளாவிய முன்னேற்றம் ஆகிவற்றிற்கு இடையேயான ஆதரவை முடிவு செய்வதை நாங்கள் நம்பவில்லை.

உண்மையிலே, ஒரே பொறுப்பு இரண்டையும் தேர்வு செய்வதுதான். ஒற்றுமை மற்றும் நிதி அர்ப்பணிப்புடன் அதை செய்து கொண்டிருக்கிறோம். ரஷியா முற்றிலுமாக, உடனடியாக உக்ரைனில் இருந்து துருப்புகளை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.