;
Athirady Tamil News

டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை செயற்படுத்த கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள் – யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன்

0

டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை செயற்படுத்த கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

டெங்கு தொற்றினை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் முதலில் நுளம்புகள் பெருகும் இடங்களை இல்லாதொழிக்க வேண்டும். மிக முக்கியமாக கிராமமட்ட குழுக்களை பயன்படுத்தி இனம் காணப்பட்ட பிரதேசங்களுக்குள் தொடர்ச்சியாக கழிவுகளை அதாவது தண்ணீர் தேங்க கூடிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையினை பிரதேச செயலர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக கிராமமட்ட குழுக்களை விரிவாக செயற்படுத்துவதன் மூலம் டெங்கு தொற்று கட்டுப்படுத்த முடியும். எந்த அளவிற்கு கிராமமட்ட குழுக்களின் செயற்பாடுகளை நாங்கள் விரிவுபடுத்துகின்றோமோ அந்த அளவிற்கு டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்த முடியும். கிராம மட்டங்களில் கிராம மட்ட குழுக்களை வலுவாக செயற்படுத்துவதன் மூலமே இதனை சாதிக்க முடியும்.

டெங்கு ஒழிப்பு வேலை திட்டங்களில் திணைக்களங்கள் மீது குற்றங்களை சாட்டிக் கொண்டிருக்காது அதற்கு பதிலாக எதனை செய்ய முடியும் என சிந்தித்து செயல்படுவது நல்லது.

குறிப்பாக தற்பொழுது பொருளாதார நெருக்கடி நிலைமையில் சிலவற்றை உடனடியாக செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது எனவே அதற்கு பதில் வீடாக செய்ய வேலை திட்டங்களை உடனடியாக செய்ய வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.