;
Athirady Tamil News

மன்னாரில் போக்குவரத்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்ட அரச பேருந்துகள்! என்ன நடந்தது?

0

மன்னாரில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் நகர சுற்றுவட்டப் பகுதியில் மன்னார் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சோதனையிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இன்றைய தினம் (06-12-2023) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பயணிகளால் தொடர்ந்து முன் வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் இன்று (6) காலை அரச பேருந்து ஒன்று நகர சுற்றுவட்ட பகுதியில் திடீரென நிறுத்தப்பட்ட போது பிரேக் லைட் ஒளிராத நிலை காணப்பட்டது.

இதன்போது குறித்த பேருந்தின் ஆவணங்களை சரி பார்த்த போதும் ஆவணங்கள் இருக்காத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் தண்டம் விதிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டது.

இதனால் பேருந்துகள் சில மணித்தியாலங்கள் காத்திருந்தமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மேலும் சில பேருந்துகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் காணப்படாத நிலையில் பிரேக் லைட் ஒளிராத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் பயணிகள் மற்றும் அலுவலகங்களுக்கு கடமைக்குச் செல்வோர் என பலரும் தாமதங்களை எதிர் கொண்ட நிலையில் மன்னார் சாலை அதிகாரிகள் வருகை தந்து பொலிஸாருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில் பேருந்துகளின் பிரேக் லைட் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளை உடன் நிவர்த்தி செய்யுமாறு பொலிஸாரினால் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை அரச பேருந்துகள் பொலிஸார் இடைமறிப்பது இல்லை. ஆவணங்களும் பார்ப்பது இல்லை. ஆவணங்கள் அனைத்தும் அலுவலகத்தில் உள்ளது.

ஆனால் இன்று பயணிகளுடன் சென்ற பேருந்தை நிறுத்தி ஆவணங்களை காட்டுமாறு கோரினர். மேலும் சாரதியின் ஆசன பட்டி உள்ளதா, பிரேக் லைட் ஒளிர்கின்றதாக என பரிசோதித்தனர்.

மூன்று பேருந்துகளுக்கு எதிராக தண்டமும் விதித்துள்ளனர். இவ்வாறு பல தடவைகள் இடம் பெற்றுள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் மன்னார் சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.