;
Athirady Tamil News

நாடாளுமன்ற தேர்தல் – உங்கள் தொகுதி அறியுங்கள் – தெற்கு சென்னை

0

தமிழ்நாட்டின் மூன்றாவது நாடாளுமன்ற தொகுதி தெற்கு சென்னை.

தெற்கு சென்னை
2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இந்த மக்களவை தொகுதியில், தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இடம் பெற்றன.

மறுசீரமைப்பிற்கு தற்போது மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் – விருகம்பாக்கம், சைதாபேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகியவை உள்ளன.

தேர்தல் வரலாறு
1957 டி. டி. கிருஷ்ணமாச்சாரி (காங்கிரஸ்)

1962 நாஞ்சில் கி. மனோகரன் (திமுக)

1967 பேரறிஞர் அண்ணா (திமுக)

1967 முரசொலி மாறன் (திமுக)

(இடைத்தேர்தல்)

1971 முரசொலி மாறன் (திமுக)

1977 இரா. வெங்கட்ராமன் (காங்கிரஸ்)

1980 இரா. வெங்கட்ராமன் (காங்கிரஸ்)

1984 வைஜயந்திமாலா பாலி (காங்கிரஸ்)

1989 வைஜயந்திமாலா பாலி (காங்கிரஸ்)

1991 ஆர். ஸ்ரீதரன் (அதிமுக)

1996 த. ரா. பாலு (திமுக)

1998 த. ரா. பாலு (திமுக)

1999 த. ரா. பாலு (திமுக)

2004 த. ரா. பாலு (திமுக)

2009 சி. ராஜேந்திரன் (அதிமுக)

2014 ஜே. ஜெயவர்த்தன் (அதிமுக)

2019 தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக)

வாக்காளர் எண்ணிக்கை
17 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,

ஆண் வாக்காளர்கள் – 9,61,904

பெண் வாக்காளர்கள் – 9,73,934

மூன்றாம் பாலினத்தவர் 371 என மொத்தம் 19,36,209 வாக்காளர்கள் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.