;
Athirady Tamil News

கல்முனை வடக்கில் மாபெரும் போராட்டம்

0

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அத்துமீறல்கள் மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் சட்டவிரோத நடவடிக்கையை மாவட்ட செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அனுமதித்து வருகின்ற நிலையில் அவற்றை கண்டித்து 11வது நாளான நேற்று  பொதுமக்களுடன் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஆரம்பமானது.

குறித்த போராட்டம் சேவை குடியிருப்பு கணேஷ் மகா வித்யாலய முன்றலில் இருந்து நடைப்பயணியாக ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு கல்முனை வடக்கு பிரதேச செயலக மூன்றலில் வந்த அமர்ந்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கணக்காளரை நியமி கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை நிறுத்தூ மற்றும் அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துபோன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் வலுப்பெற்றது.

குறித்த போராட்டத்தின்போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், செல்வராசா கஜேந்திரன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ,தமிழரசு கட்சி முக்கியஸ்தர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட வாலிபர் முன்னணி செயலாளர் கருணாகரன் குணாளன் , தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரமுகர் கணேசானந்தம் ஆகியோர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று இருந்தனர்.

இந்த வேளை நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கூறியதோடு குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் போராட்டம் போராட்டம் மேலும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்லப்படும் என பல்கலைக்கழக மாணவர்கள் அலசியல் தலைமைகளிடம் வலியுறித்தியிருந்தனர்

இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் கொடூரத்திலும் நிழல் கூடாரம் அமைக்கத் பொலீசார் தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.