;
Athirady Tamil News

அண்டர்சனின் பந்துவீச்சில் போல்டான ரிஷி சுனக்!

0

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் காணொளியானது வைரலாகி வருகின்றது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்துப் பேசியுள்ளார்.

கிரிக்கெட் விளையாடிய ரிஷி சுனக்
அப்போது ஆண்டர்சன் பந்து வீச ரிஷி சுனக் துடுப்பெடுத்தாடி வலை பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

அதன் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்துக்கு ரிஷி சுனக் போல்டாக, ஆண்டர்சனுக்கு பாரராட்டும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான காணொளியை பிரதமர் ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காணொளியானது தற்போது வைரலாகி வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.