;
Athirady Tamil News

வெளிநாட்டவரினால் பரவக்கூடிய நோய்கள்! ஜப்பான் நீட்டிய உதவிக்கரம்

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர்(Dollar) பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை(Scanners) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.

குறித்த இலங்கைக்கு வெளிநாட்டவரினால் பரவக்கூடிய பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிரச்சினைகளை கண்காணிக்க ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கையானது நேற்று(10) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானிய தூதுவர்
மானிய உதவியின் கீழ் முதல் தொகுதி உபகரணங்களானது துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம்(Nimal Siripala de Silva) இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிவினால்(Mizukoshi Hideaki) கையளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை சர்வதேச குடியேற்ற அமைப்பு (International Organization for Migration) செயல்படுத்துகிறது.

நோயைக் கண்டறியும் ஸ்கேனர்கள் தவிர பேக்கேஜ் ஸ்கேனர்கள், முழு உடல் ஸ்கேனர்கள், வெளிநாட்டு பாஸ்போர்ட் ஸ்கேனர்கள் மற்றும் பயோமெட்ரிக் அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தி
மேலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 அலகுகளைக் கொண்ட ஸ்மார்ட் மலசலகூட அமைப்பை நிறுவுவது இந்த திட்டத்தில் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் மிஷுகோஷி ஹிடேகி மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு ஜப்பான் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குமென தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அவர் வலியுறுத்தியதோடு அத்தகைய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்த மானியம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.