;
Athirady Tamil News

விமானத்தில் பயணிகள் மோதல் : வெளியான அதிரடி காணொளி

0

தாய்வானில்(Taiwan) இருந்து கலிபோர்னியா(California) செல்லும் விமானமொன்றில் பயணிகள் இடையே ஏற்பட்ட தகராறு ஒன்றின் காணொளியானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குறித்த விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகளும் இருக்கைக்காக இவ்வாறு தாக்குதல் நடத்தியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் சுகயீனமடைந்துள்ளார்.

அமர்ந்திருந்த பயணி

இதன் காரணமாக அவர் அருகே அமர்ந்திருந்த பயணி, வெற்றிடமாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் வெற்றிடமாக இருந்த ஆசனத்தில் ஏற்கனவே அமர்ந்திருந்த பயணி தனது இருக்கையை கோரியுள்ளதையடுத்து அதற்கு அந்த பயணி மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் விமான ஊழியர்களின் பொறுமை மற்றும் கடமை உணர்வை சமூகதளவாசிகள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.