வயல்களில் நீர் தேங்கி நிற்பதால் கையினால் அறுவடையினை மேற்கொள்ளும் விவசாயிகள்

கிளிநொச்சி மாவட்டத்தின், குறிப்பாக கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளைந்த நெல் வயல்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த நெல் வயல் நிலங்களை தங்களின் உணவுத் தேவைக்காவது அரிசியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கையினால் நெல் அறுவடை செய்யவதனை நேற்று(29) அவதானிக்க முடிந்தது.
இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு காலபோக நெல் வயல்கள் வெள்ள அனர்த்தங்களினால் அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவடையினை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் தொடர்ச்சியான வெள்ள நிலமை காரணமாக தமது உணவுத்தேவைக்காவது அரிசியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கையினால் நெல் அறுவடை செய்து வருவதாகவும், தமது தோள்களிலே சுமந்து சென்று அறுவடை செய்த நெல்லினை வீதிகளில் நெல்லினை உலர வைத்த பின்னரே நெல்லினை பயன்படுத்த முடியும் எனவும் அத்துடன் தேறிய முழுமையான நெல்லாக இல்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.