;
Athirady Tamil News

65 வயது முன்னாள் எம்பியை இரண்டாவது திருமணம் செய்தார் மஹூவா மொய்த்ரா

0

65 வயது முன்னாள் எம்பியான பினாகி மிஸ்ராவை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா(50) இரண்டாவது திருமணம் செய்தார்.

மஹூவா மொய்த்ரா திருமணம்
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா(50) தனது கணவர் லார்ஸ் பிரார்சன் என்பவரை விவாகரத்து செய்திருந்தார்.

இவர், தனது நாடாளுமன்ற இ-மெயிலில், தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தினி என்பவரை கேள்வி எழுப்ப அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் அம்பலமானதால் மஹூவா மொய்த்ரா தனது எம்பி பதவியை இழந்தார். பின்னர், அடுத்த நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிணமூல் சார்பில் மீண்டும் போட்டியிட்டு எம்பியானார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பிஜு ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பினாகி மிஸ்ராவை (65) மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் மணந்தார்.

இவர்களின் திருமணம் கடந்த மாதம் 30-ம் திகதி நடைபெற்றுள்ளது. தற்போது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.