;
Athirady Tamil News

பட்டாதாரி மகளுக்கு தந்தை செய்த கொடூரம் ; அதிர்ச்சியளித்த பகீர் காரணம்

0

தமிழகம் காட்டுமன்னார் கோயில் அருகே பட்டதாரி பெண்ணை கோவில் பின்புறம் உள்ள வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தந்தையிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட T.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் அபிதா(27) என்ற பட்டதாரி பெண் உள்ள நிலையில், பெண்ணிற்கு வேறு ஒரு ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

திருமணத்திற்கு மறுப்பு
இதற்கு தந்தை அர்ஜுனன் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து அந்த இளைஞருடன் அபிதா பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அபிதாவிற்கு பல்வேறு வரன்கள் பார்த்து வந்த நிலையில் அபிதா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் மீண்டும் சண்டை போட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அர்ஜுனன், அபிதாவை அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு அருகில் இருந்த பாத்திரத்தில் கையை கழுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று தற்போது காட்டுமன்னார்கோயில் பொலிஸ் நிலையத்தில் அர்ஜுனன் சரணடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸார் விசாரணைக்கு பிறகு கொலைக்கான காரணம் குறித்து முழு பின்னணியும் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.