தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 51 ஆயிரம் அதிக மாணவர்கள் தேர்ச்சி
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் 51 ஆயிரத்து 969 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிங்கள மொழி மூலத்திற்கான வெட்டுப் புள்ளிகள் 140 எனவும், தமிழ் மொழிக்கான வெட்டுப் புள்ளிகள் 134 எனவும் இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக அதிகபட்ச மதிப்பெண்ணாக 198, காலி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. அதேநேரம், தமிழ் மொழி மூலம், அதிகபட்ச மதிப்பெண் 194 யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது.