குடியிருக்க வீடு கிடைக்காமல் திண்டாடும் மஹிந்த ராஜபக்க்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் குடியேற இடங்களைத் தேடி வரும் நிலையில் இன்னும் பொருத்தமான வீடு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவுக்கு ஏற்றால்போல் போதுமான மற்றும் பொருத்தமான சாலை வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பதே எதிர்பார்ப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பொருத்தமான வீடு விரைவில் கிடைக்கும் என்றும் சாகர காரியவசம் மேலும் கூறினார்.