அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்து: மூன்று பேர் படுகாயம்
அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் சாக்ரமெண்டா நகரில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்து ஹைவே 50-ன் கிழக்கு நோக்கிய சாலையில் நடந்துள்ளது.
விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியான புகைப்படங்களில் ஹெலிகாப்டர் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கிடப்பது பார்க்க முடிகிறது.
விபத்துக்குள்ளான மருத்துவ ஹெலிகாப்டர் ஆனது, நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, மீண்டும் தன்னுடைய நிலைக்கு சென்ற கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு துறையினர் வெளியிட்ட தகவலில், இரவு 7 மணியளவில் விமானத்தின் அவசர நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.