;
Athirady Tamil News

காசாவில் வெடித்த புதிய உள்ளூர் மோதல்: ஊசலாடும் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம்

0

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் புதிய வன்முறை வெடித்து இருப்பது நிலைமை மோசமடைய செய்து வருகிறது.

காசா உள் மோதலில் 27 பேர் பலி
காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும் உள்ளூர் ஆயுதக் குழுவுக்கும் இடையே நடந்த புதிய வன்முறை மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், இந்த உள் மோதலானது நிலைமையை மோசமடைய செய்துள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான பயங்கரமான துப்பாக்கிச் சூடு காரணமாக டஜன் கணக்கான அப்பாவி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

காசா போர் காரணமாக இந்த மக்கள் ஏற்கனவே பலமுறை தங்களை வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், தற்போதைய நிலைமை அவர்களை மேலும் கவலைக்குள் தள்ளியுள்ளது.

நெருங்கும் காலக்கெடு
இந்த உள்ளூர் மோதலுக்கு மத்தியில், நாளை காலை உள்ளூர் நேரப்படி 12.00 மணிக்குள் ஹமாஸ் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

இந்த நடவடிக்கைக்காக இஸ்ரேல் மற்றும் சர்வதேச நாடுகள் பல காத்திருக்கின்றனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிணைக் கைதிகள் விடுவிப்பு குறித்து “நாளை புதிய பாதையின் தொடக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம், மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு சவால்களும் உள்ளன எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.