நியூயார்க்கில் உயிருக்கு போராடிய தாய், குழந்தை! ஹீரோவாக காப்பாற்றிய ஓய்வுபெற்ற காவலர்கள்
அமெரிக்காவில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள், பெண் மற்றும் அவரது குழந்தையை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை பெற்றது.
நீரில் மூழ்கிய தாய்-குழந்தை
நியூயார்க் நகரில் நதியில் 30 வயது பெண்ணும், அவரது குழந்தையும் நீரில் மூழ்குவதை, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் சிலர் கண்டுள்ளனர். உடனே நதியை நோக்கி ஓடிய அவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது குழந்தையின் தலை கிட்டத்தட்ட மூழ்கியிருந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக காவலர் பின்ஸ்டோர்ஃப் அப்பெண்ணையும், குழந்தையையும் மீட்டுள்ளார்.
அச்சமயம் காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் உதவிக்கு வந்து கரைக்கு கொண்டு அழைத்து வந்தனர்.
மாய்த்துக் கொள்ள திட்டம்
பின்னர் பெயர் குறிப்பிடப்படாத பெண் North Shore பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் குழந்தை நியூயார்க் Presbyterian-க்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது காப்பாற்றப்பட்ட ஐந்து மாத பெண் குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. குறித்த பெண் தனது உயிரையும், தனது குழந்தையையும் மாய்த்துக் கொள்ள திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.
இதற்கிடையில் தண்ணீரில் தத்தளித்த பெண், குழந்தையை காப்பாற்றிய ஓய்வுபெற்ற காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
