;
Athirady Tamil News

புதிய வர்த்தக ஒப்பந்தம் ; பிரித்தானியா – அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம்

0

பிரித்தானியா, அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்கா ஏற்றுமதிக்கான பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது பூஜ்ஜிய வரி (Zero Tariffs) மட்டுமே விதிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ பொருட்கள் மீது, அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்று நிச்சயமற்ற நிலை அதிகரித்த நிலையில், கவலைகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் படி, அமெரிக்காவிற்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பூஜ்ஜிய வரியைப் பெற்ற முதல் நாடு பிரித்தானியா ஆகும்.

அமெரிக்காவின் முடிவுக்கு ஈடாக, பிரித்தானியா அரசு பரஸ்பர நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனம் (NICE), தேசிய சுகாதார சேவை (NHS) புதிய மருந்துகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் செலவு – திறன் அடிப்படை வரம்பை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த முடிவின் மூலம் செலவு திறன் அடிப்படை வரம்பை NICE 25% உயர்த்த உள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.