;
Athirady Tamil News

இளம் ஹொக்கி வீரர்களின் உயிரை பறித்த கோர விபத்து: சோகத்தில் மக்கள்

0

கனடாவின் அல்பெர்டா மாகாணம் ஸ்டேவ்லி பகுதியில் நிகழ்ந்த ஒரு கோர சாலை விபத்து, மூன்று இளம் ஹொக்கி வீரர்களின் கனவுகளையும், பல குடும்பங்களின் எதிர்காலத்தையும் ஒரே நொடியில் சிதைத்துவிட்டது.

திங்கள் காலை பயிற்சிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட இந்த விபத்தில், 17 மற்றும் 18 வயதுடைய மூன்று இளம் வீரர்கள் உயிரிழந்தது, ஹொக்கி உலகத்தை மட்டுமல்ல; முழு சமூகத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் தென் அல்பேர்ட்டா முஷ்டாங்ஸ் Southern Alberta Mustangs அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த 17 வயதான கேடன் ஃபைன், பிரிட்டிஷ் கொலம்பியாவின் காம்லூப்ஸ் பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஜே.ஜே. ரைட் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான கேமரன் கசோர்சோ ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றும் பாரவூர்தியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தி சாரதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில், காரில் பயணித்த மூன்று இளம் வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்கள் வெறும் ஹொக்கி வீரர்கள் அல்ல; மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள் – எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி தென் அல்பேர்ட்டா மஸ்டாங்க் கழகம் உருக்கமாக இரங்கல் வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.