;
Athirady Tamil News

டீன் ஏஜ் பெண்ணின் கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

0

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் வசிக்கும் 17 வயது சிறுமி, பக்கத்து வீட்டு நண்பருடன் பழகி கர்ப்பமானார். அவர் தற்போது 30 வார கருவை வயிற்றில் சுமக்கிறார். தற்போது அவருக்கு 18 வயது 4 மாதங்கள் ஆகிறது. சட்டவிரோதமாக பிறக்கும் இந்த குழந்தையை பெற்றெடுக்க, டீன் ஏஜ் பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லை.

இதனால் கருவை கலைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்தினா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

தவிர்க்க முடியாத சூழலால் கருவுற்றதே தற்போதைய பிரச்னையாக உள்ளது. டீன் ஏஜ் பெண், குழந்தை பெற்று தாயாக விரும்பாததையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இன்னும் பிறக்காத ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும்போது, அந்த தாயின் உரிமையே மேலானது.

மொத்தத்தில் கருவை சுமக்க விரும்பவில்லை என்பதால், அனைத்து மருத்துவ பாதுகாப்புகளை பின்பற்றி, இச்சிறுமியின் 30 வார கருவை கலைக்க மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.