;
Athirady Tamil News

மனைவிக்கு கருச்சிதைவு ; கடவுள் பெயரில் வயதான பெண்களுக்கு இளைஞன் நிகழ்த்திய பெரும் கொடூரம்

0

மத்தியப் பிரதேசத்தில், மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால், பக்கத்து வீட்டுப் பெண்கள் இரண்டு பேரைப் பூஜைக்கு என அழைத்து தலையை வெட்டி கடவுளுக்குப் பலி கொடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில், அதர்வா என்ற கிராமத்தில் வசிப்பவர் 21 வயதான இளைஞன் ஒருவர் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட இவரது மனைவி சமீபத்தில்தான் கர்ப்பமாகியுள்ளார்.

மனைவிக்கு கருச்சிதைவு
திடீரென மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் நொந்துபோன இளைஞன் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். கடவுள் தன்மேல் மிகுந்த கோபத்தில் இருப்பதாக நினைத்து அவரை எப்படியாவது சாந்தப்படுத்த வேண்டும் என நினைத்த இளைஞன் தனது வீட்டில் பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

பூஜைக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி தடபுடலாக ஏற்பாடுகளை செய்தவர், நரபலி கொடுத்தால்தான் கடவுள் சமாதானமடைவார் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

யாரை நரபலி கொடுப்பது என யோசித்தபோது பக்கத்து வீட்டில் வசித்துவந்த உறவினர்களான 50 வயதான மற்றும் 65 வயதான இருவரை பலி கொடுத்துவிட முடிவுசெய்துள்ளார்.

இருவரையும் பூஜைக்கு அழைத்து முடிவில் இருவரின் தலையையும் வெட்டியுள்ளார். அத்துடன் தடுக்க வந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் மிரண்டு போய் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். உடனே அவர்கள் பொலிஸாசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

படுகாயமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரையும் மீட்ட பொலிஸார், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் இரண்டு பேரின் தலையும் துண்டாக்கப்பட்டு கிடந்தன. உடல்களின் அருகில் தேங்காய் மற்றும் பூஜைப் பொருட்கள் கிடந்தன.

முதல்கட்ட விசாரணைக்குப் பின்னர், பில்லி சூனியத்தால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.