;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் ஐநா வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே: சிவில் சமூகத்தினர் மற்றும் அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!

0
 ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினருடன் ஐநா வதிவிடப் பிரதிநிதி சந்தித்து கலந்துரையாடினார்.
சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐநா வதிவிடப் பிரதிநிதி, யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்களுடன் மதிப்புமிக்க கலந்துரையாடல் நடைபெற்றது. பிராந்திய அபிவிருத்தி,
நில விடுவிப்பு மற்றும் , இராணுவ பிரசன்னம்,பயங்கரவாத தடைச் சட்டம், போதைப்பொருள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான சவால்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
குரல்கள் கேட்கப்படுவதையும், தீர்வுகள் வேரூன்றுவதையும் உறுதிசெய்ய, குடிமைவெளியைப் பாதுகாப்பது இன்றியமையாதது. மாற்றத்திற்காக உழைப்பவர்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் துணை நிற்கிறது – என்றுள்ளது.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.