;
Athirady Tamil News

துபாய் அழியும் – அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

0

ஈரான் போரில் அமெரிக்கா-இஸ்ரேல் பக்கம் நிற்கும் அமீரகத்திற்கு அமெரிக்க பொருளாதார நிபுணர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் முடிவால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “துபாய், அபுதாபி போன்ற நகரங்கள் சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக வடிவமைக்கப்பட்டவை. இவை பாதுகாப்பு தளங்களாக இல்லை. அமீரகம் போரில் ஈடுபட்டால், இந்த நகரங்கள் நேரடி தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம். இது துபாயின் அடிப்படை நோக்கத்தையே அழிக்கும்” என ANI-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சாக்ஸ், “அப்ரஹாம் ஒப்பந்தம்” (Abraham Accords) மூலம் அமெரிக்கா-இஸ்ரேல் பக்கம் நிற்கும் அமீரகத்தின் முடிவு “அழிவுக்கான அழைப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவுடன் நட்பு வைத்திருப்பது உயிருக்கு ஆபத்தானது” என ஹென்றி கிஸ்ஸிங்கர் கூறிய பழமொழியை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரான், மேற்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து, “அமெரிக்கா தங்கள் தளங்களை ஈரானுக்கு எதிராக பயன்படுத்தினால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகளில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முயற்சிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.