;
Athirady Tamil News

இலங்கையை உலுக்கிய சம்பவம்; பாடசாலை மோதலில் 15 வயது மாணவன் உயிரிழப்பு!

0

தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தையும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது.

​லுனுகம்வெஹெர – மத்தல பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.​

வாய்த்தர்க்கம்
கடந்த மார்ச் 23ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின் போது, தண்ணீர் குடிக்கச் சென்ற இடத்தில் 11ஆம் தர மாணவனுக்கும், 10ஆம் தர மாணவனுக்கும் இடையே சிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இது பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், ஆசிரியர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.​பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவன், கடும் வாந்தி மற்றும் தலைவலியால் துடித்துள்ளார்.

பெற்றோர் பதறியடித்துக் கேட்டபோது, “விளையாடும் போது தவறி விழுந்துவிட்டேன்” என்று கூறி உண்மையை மறைத்துள்ளார்.​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மாணவின் மூளையினுள் பலத்த இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டும், அந்தப் பிஞ்சு உயிர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரிந்தது.​

தாக்குதல் நடத்திய 14 வயது மாணவன் மத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மாணவன் உயிரிழந்துள்ளதால், இந்த வழக்கு மிகத் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.