;
Athirady Tamil News

ஈரானிடம் இருந்து அமெரிக்க விமானியை மீட்டதற்காக டிரம்புக்கு நெதன்யாகு பாராட்டு

0

டெல் அவிவ்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் அதிகரித்து காணப்படும் சூழலில், அமெரிக்காவின் அதிக திறன் படைத்த எப்-15 ரக விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது என்று தகவல் வெளியானது. ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க விமானத்தில் இருந்த வீரரை மீட்ட, அதிக ஆபத்து நிறைந்த பணியை செய்ததற்காக அமெரிக்காவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.

இதற்காக அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அமெரிக்காவின் துணிச்சலான விமானியை, அமெரிக்க வீரர்கள் மீட்டதற்காக, அனைத்து இஸ்ரேல் மக்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இருள் மற்றும் பயங்கரத்தின் படைகளால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியாத சூழலை எதிர்கொண்டு, துணிச்சலுடன் செயல்பட்டு, தீர்க்கம் வாய்ந்த முடிவுகளை எடுத்துள்ளனர் என்றும் அவர்களை நெதன்யாகு பாராட்டி உள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வரலாற்றில் ஆழ வேரூன்றியுள்ள விசயம் என்னவெனில், எந்தவொரு வீரரும் விடுபட்டு விட கூடாது என்ற புனித கொள்கையை, இந்த விசயம் மீண்டும் வலுப்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.