;
Athirady Tamil News

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

கனடாவில் வசிக்கும் திருமதி இந்திரன் கவிதா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

புங்குடுதீவை பூர்வீகமாக் கொண்ட அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் கனடாவில் வசிக்கும் இந்திரன் என அன்புடன் அழைக்கப்படும் சொக்கலிங்கம் ஆபிரகாம்லிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் மருமகளுமான புங்குடுதீவு இறுப்பிட்டியை பூர்வீமாகக் கொண்டு கனடாவில் வசிக்கும் திருமதி.கவிதா ஆபிரகாம்லிங்கம் அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில்..

வன்னி எல்லைக் கிராமமொன்றில் உள்ள அக்கிராம மாணவர்களுடன், அப்பிரதேச குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களும் அக்கிராம மக்கள் சிலரும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கனடாவில் வசிக்கும் கவிதா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வறுமைகோட்டுக்கு உட்பட்ட வவுனியா இறம்பைக்குளம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கனடாவில் வசிக்கும் கவிதா அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.,

வவுனியா றம்பைக்குளம் கிராம அலுவலகர் திருமதி பவித்ரா தினேஷ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் வவுனியா றம்பைகுளம் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர் திருமதி சாருதா கனகராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அக்கிராம மாணவ, மாணவிகளுக்கு திருமதி கவிதா ஆபிரகாம்லிங்கம் அவர்களது நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்களாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் கனடாவில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி கவிதா ஆபிரகாம்லிங்கம் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தும் அதேவேளை, தனது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் கிராம மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்தமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
08.05 2026

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (வீடியோ)


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.

https://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. 

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.