;
Athirady Tamil News

நாட்டில் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0

பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கும், மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் இந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 9 மணிமுதல் நாளை இரவு 9 மணிவரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.