;
Athirady Tamil News

ஈராக் மீது ஈரான் தாக்குதல் – அமெரிக்க வீரர் பலி

0

பாக்தாத்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன் அவ்வழியாக சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

அமெரிக்க வீரர் பலி
இதனால் இரு தரப்பும் இடையே இன்று 9 நாட்களாக தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. அந்த வகையில் பஹ்ரைன், குவைத், ஜோர்டான், ஈரான் ஆகிய நாடுகள் மீது ஈரான் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஈராக்கின் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஈரான் ஏவிய டிரோனை செயலிழக்க செய்த முயற்சித்தபோது அது வெடித்தது. இந்த சம்பவத்தில் அமெரிக்க வீரர் உயிரிழந்தார். இதன் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் மோதலில் ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.