;
Athirady Tamil News

கலையரங்கிற்கு கதிரை கொள்வனவு; முன்னாள் செயலாளர் கைது

0

பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கிற்கு கதிரைகளைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் காமினி கித்சிறி தியாஸ் அமரவத்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கிற்கு கதிரைகளைக் கொள்வனவு செய்யும்போது, குறைந்த தொகையைக் குறிப்பிட்ட தகுதியான தனியார் நிறுவனத்தை நிராகரித்துவிட்டு, வேறு ஒரு நிறுவனத்திடமிருந்து கதிரைகளைக் கொள்வனவு செய்ததாக காமினி கித்சிறி தியாஸ் அமரவத்தன மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.