காலிமுகத்திடல் சம்பவம்:ஐக்கிய நாடுகள் சபை கவலை !! (வீடியோ)

ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு போராட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உரிமை உண்டு. அவர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.