மனநல நோயாளியின் கத்தி குத்தில் 7 பேர் படுகாயம்
கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றையதினம் (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஏழு பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.
மனநல நோயாளி வீட்டில் இருந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து சந்தேக நபர் உடுதும்பர பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.