;
Athirady Tamil News

ஹரிணி அமரசூரியவை நீக்குங்கள் ; ஜனாதிபதிக்கு தேரர் கடிதம்

0

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என நாட்டை பாதுகாப்போம் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட மனு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். தேரர் அனுப்பிய மனுவில்,

அறியாமை அரசாங்கத்தின் நேரடி விளைவுகள்
பிரதமரின் தலைமையில் செயல்படுத்தப்பட உள்ள தன்னிச்சையான கல்வி சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு, அதன் மக்கள் மற்றும் புத்த சாசனம் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமைந்துள்ளது.

மக்கள் மற்றும் நாட்டின் மீது அக்கறை இல்லாத ஒரு அறியாமை அரசாங்கத்தின் நேரடி விளைவுகள் இறுதியில் தேசத்திற்கும் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்புக்களை விளைவிக்கும். கல்வி சீர்திருத்தங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை.

ஏனெனில் பௌத்த பிக்குகள், பிற மதங்களின் மதகுருமார்கள், ஆசிரியர்கள் அல்லது கல்வி நிபுணர்களிடமிருந்து எந்த கருத்துகளும் கோரப்படவில்லை. அதன்படி, இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த எடுக்கப்பட்ட செயல்முறை அடிப்படையில் குறைபாடுடையது.

ஒரு பௌத்த தேரர் என்ற வகையில் வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றும் எல்லே குணவன்ச தேரர், ஜனாதிபதி திசாநாயக்க, நாட்டையும், அதன் மக்களையும், புத்த சாசனத்தையும் இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.