டான் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிவரும் ‘சாதனைத் தமிழன்’ விருது வழங்கும் நிகழ்வின் 2025 ஆம் ஆண்டுக்கான விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று (17.01.2025) இரவு டான் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா சிறப்பு நிகழ்வின் போது இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், யாழ். மாநகர சபையின் மேயர் வி.மதிவதனி ஆகியோர் இணைந்து 2025 ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருதை நாதஸ்வர சக்கரவர்த்தி பாலமுருகன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.
இலங்கையில் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைக்கும் ஆளுமைகளைத் தெரிவுசெய்து ஆண்டுதோறும் டான் தொலைக்காட்சி இவ்விருதினை வழங்கி வருகின்றது. அந்தவகையில்இம்முறை நாதஸ்வர சக்கரவர்த்தி பாலமுருகன் அவர்கள் இவ்விருதுக்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.