யாழில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ; ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – கச்சேரி நல்லூர் வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயமடைந்துள்ளார்.
அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.