;
Athirady Tamil News

யாழில் சகோதரனை தேடி சென்ற சகோதரிக்கு இரவில் காத்திருந்த பெரும் அதிர்ச்சி ; 05 முறை காப்பாற்றியும் இறுதியில் துயரம்

0

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உடற்கூற்றுப் பரிசோதனை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

உயிரிழந்த இளைஞர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது, உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவர், இரவு உணவை உட்கொண்ட பின்னர் சுமார் 8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இரவு 10.00 மணி கடந்தும் அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது சகோதரி அவரைத் தேடிச் சென்றுள்ளார். இதன்போது அவர் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.