;
Athirady Tamil News

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு நாட்டின் உயரிய விருது: இஸ்ரேல் அறிவிப்பு

0

பிளைதுபாய் விமானத்தின் காக்பிட்டில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட போதும், தனது உயிரை பணையம் வைத்து, விமான பயணிகளை காப்பாற்ற துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் நாட்டின் உயரிய குடிமக்கள் வீர விருது வழங்கப்பட உள்ளது.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இதனை அறிவித்துள்ளார். உடல்நலம் தேறிய பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறியதாவது: கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலும் தொழில்முறை திறமையும் மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளது. ஸ்மித் மச்சார் உடல்நலம் தேறியதும் இஸ்ரேல் மக்களின் சார்பில் குடிமக்கள் வீரத்திற்கான அதிபர் விருதை வழங்குவதில் பெருமையடைகிறேன்”என்று தெரிவித்துள்ளது

மருத்துவமனையில் சிகிச்சை

விமான கடத்தல் முயற்சியின் போது, ஓமன் துணை விமானியால் தாக்கப்பட்டதில், பலத்த காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரும் கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஸ்மித் மச்சாரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.