கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட அறிவித்தல்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்வு
வற் வரி அதிகரிப்பால், பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
அதற்கமைய, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வற் வரி உயர்வுக்கு முன்னர்…
பதவியை துறந்த சமிந்த விஜேசிறி: வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின் வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.
அவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை…
ராமர் கோவில் திறப்பு விழா அன்று அறுவை சிகிச்சை செய்யனும் – விடாப்பிடியாக…
ராமர் கோயில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற கர்ப்பிணிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமர் கோயில் திறப்பு
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி…
ஈழத்தமிழர் படைத்த சாதனைக்கு உயரிய விருது வழங்கும் பிரித்தானியா
பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி…
குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் முக்கிய அறிவித்தல்
குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் மூன்று வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமை வீதம் முன்னெடுக்கப்படும் என சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (08.01.2024)…
தமிழர் பகுதி ஒன்றை உலுக்கிய இரட்டை கொலை: சந்தேக நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள பிரதான சந்தேக நபரை எரியுண்ட வீட்டு உரிமையாளர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.…
யாழ்.குடாரப்பில் புத்தபெருமான் வீற்றிருக்கும் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை கரை ஒதுக்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன் , உடுத்துறை மற்றும்…
யாழில். விசேட சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அதன் போது , மத்திய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற பேருந்துகள் மற்றும் அங்கிருந்து புறப்பட தயார் ஆனா பேருந்துகளை…
பொதுவெளியில் 74 முறை கசையடி வாங்கிய பெண்: அவர் செய்த குற்றம்
பொது ஒழுக்கத்தை மீறியதற்காக ஈரானிய அதிகாரிகள் பெண் ஒருவரை 74 முறை சவுக்கால் அடித்துள்ளதுடன், தலையை மறைக்காததற்காக அபராதமும் விதித்துள்ளனர்.
அவமானகரமான முறையில்
தண்டிக்கப்பட்ட Roya Heshmati என்பவர், தெஹ்ரானில் பரபரப்பான பொது இடங்களில்…
‘நம்பிக்கை இழந்துவிட்டேன்’ சிறையில் சாவதே மேல் – நீதிபதியிடம் கதறிய ஜெட்…
பணமோசடி வழக்கில் சிறையில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், உயிரோடிருப்பதை விட இறப்பதே மேல் என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மோசடி வழக்கு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848.86 கோடி கடனில், ரூ.538.62 கோடி மோசடி…
வெளிவந்த சுவாரசிய பின்னணி : வடையை மட்டுமல்ல தங்கத்தையும் களவாடிய காகம்
சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று காகமொன்று கூடு கட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீப, திருமண நிகழ்வொன்றுக்கு சென்றுள்ளனர்
அதன் போது அவரது சிறிய…
கனமழையால் வெள்ளப்பெருக்கு… குகைக்குள் சிக்கிய ஐவர்: மீட்கும் பணியில் சிக்கல்
ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஐவர் குகைக்குள் சிக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை மதியத்திற்கு மேல்
தென்மேற்கு ஸ்லோவேனியாவில் அமைந்துள்ள குகை ஒன்றில் அந்த ஐவரும் உள்ளூர் நேரப்படி…
போரை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளா்கள் போராட்டம்
காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பாலஸ்தீன ஆதரவாளா்கள் சனிக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமாா்…
தமிழ் எழுத்துக்களாலான திருவள்ளுவர் சிலை இந்தியாவில் திறந்து வைப்பு
இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிலை ஒன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையானது தொலைக்காணொளி தொழில் நுட்பத்தின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை (05.01.2024)…
தங்க குவியலின் மீது கட்டப்பட்டுள்ள நகரம்: விண்வெளியில் இருந்து வந்த புகைப்படம்
தென் அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள லா ரின்கோனாடா நகரம் தங்க குவியிலின் மீது கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நகரத்தில் தங்கம் காணப்படும் விண்வெளி புகைபடமொன்றை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பல…
காலிமுகத்திடல் போராட்டம் : மக்கள் கோரிக்கைகளை ரணில் பூர்த்தி செய்வதாக நாமல் ராஜபக்ச தகவல்
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்மானங்களை தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…
மாற்று சமூகத்தினருடன் திருமணம்: மகளை எரித்த தந்தைக்கு வலைவீச்சு
பட்டுக்கோட்டையில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள்…
அரச ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் சம்பள அதிகரிப்பு : நிதி அமைச்சின் அறிவிப்பு
நெருக்கடியான நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற…
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி அடையாள எண் : எடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய தீர்மானம்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த…
பங்களாதேஷில் ஐந்தாவது முறையாகவும் பிரதமரானார் ஷேக் ஹசீனா
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷின் பிரதமர் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக…
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான விசேட தகவல்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்று தனது ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலும் பொதுப்…
மட்டக்களப்பில் செங்குத்தாக கவிழ்ந்த முச்சக்கர வண்டி
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று செங்குத்தாக கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று திங்கட்கிழமை (8) காலை இடம்பெற்றுள்ளது.…
ஆலயத்தில் வேலை செய்த இளைஞன் திடீரென உயிரிழப்பு! தமிழர் பகுதியில் நடந்த துயரம்
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள ஆலயமொன்றின் தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக்கொண்டு…
யாழில். கஞ்சா மற்றும் கசிப்புடன் பெண் கைது
யாழ்ப்பணம், கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றைய…
கனடா வாழ் மக்களுக்கு எச்சரிக்கை: வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்
கனடாவின் ரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்குமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரொறன்ரோவில் நாளை(09)பனிப்புயல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த…
செந்தில் பாலாஜி வழக்கு ஆவணங்கள்:ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு அனுமதி
அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரானபோக்குவரத்து பணி நியமன பண மோசடி வழக்கில் தொடா்புடைய ஆவணங்களை ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2011-16 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக…
1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள்; கிழக்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல்…
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா இன்று (08) திருகோணமலையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல்…
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நூதன முறையில் கொள்ளை
இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணமோசடி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் 8 முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த ஸ்தலங்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பெறுமதிசேர் வரி அதிகரிப்பே காரணம்…
ஒரே வாரத்தில் 2,000 ஐக் கடந்த டெங்கு நோய்த்தாக்கம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள…
புதிய ஆண்டின் முதல் வாரத்திலேயே டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அவருடைய கூற்றுப்படி கடந்த ஏழு நாட்களில் 2,316 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு…
போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள உயர்வு: ரணிலுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
ஏறக்குறைய ஐந்து வருடங்களாக தாமதமாகி வரும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளத்தை உத்தியோகபூர்வமாக திருத்தியமைப்பதற்கு உடனடியாக தலையிடுமாறு அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்துவது கடினம் : கைவிரித்தது கத்தார்
லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத்தலைவர் கொல்லப்பட்ட நிலையில் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அந்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது கடினம் என கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது .
கத்தார் பிரதமர் மொஹமத் பின்…
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட பெருந்தொகை பெறுமதியான அபின்…
வடக்கில் முதல்முறையாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகை பெறுமதியான அபின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் திங்கட்கிழமை (08) காலை…
கல் உடைப்பு ஆலைகளால் மாசுபாடு: அறிவியல்பூா்வ ஆய்வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கல் உடைப்பு ஆலைகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து அறிவியல்பூா்வ ஆய்வை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த ஆலைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகச்…